ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
ஜார்க்கண்ட்: அரசு ஊழியர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் மாநில அரசு ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போகாரோ மாவட்டத்தின் மதுகார்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிண்டு நாயக் (வயது 26) இவர் ஹசாரிபாக் மாவட்டத்தில் மாநில அரசின் கருவூல அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் நேற்று (ஜன.12) மதுகார்ப்பூரிலுள்ள தனது குடும்பத்தினரைக் காண வந்திருந்தாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு தனது குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுவிட்டு அவர் தனது அறையில் உறங்கச் சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அவரது அறைக்குள் வந்து பார்த்துள்ளனர். அப்போது, பிண்டுவின் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதையும் படிக்க:இந்திய ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி!
பின்னர், உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை ஜம்னோரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாநில காவல் துறையினர், கொலை நடைபெற்ற அவரது வீட்டில் தடயங்களை சேகரித்ததுடன், அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.