செய்திகள் :

WHIL: ''பெண் ஹாக்கி அணிக்கான காலம் வெகுதூரத்தில் இல்லை'' - சொல்கிறார் முன்னாள் கேப்டன்!

post image

பிரிஸ்பேனில்  2032-ம் ஆண்டு  நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கிலும் அதற்கு அப்பால் நடைபெறவிருக்கும் போட்டிகளிலும் தேசிய அணியில் இளம் பெண்கள் இடம்பிடித்து களம் அமைக்க, பெண்கள் ஹாக்கி இந்தியா லீக் (WHIL) ஊக்குவிக்கும் என நம்புவதாக, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால்  தெரிவித்திருக்கிறார். 250 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் ஹரியானாவைச் சேர்ந்தவர்.

Rani Rampal

நேற்று முதல் (ஜனவரி 12) ஜனவரி 26 வரை ராஞ்சியில் முதல்முறையாக நடைபெறும் தொடக்க பெண்கள் ஹாக்கி இந்தியா லீக்கில் டெல்லி SG சைப்ரஸ், ஒடிசா வாரியர்ஸ், ஷ்ராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் மற்றும் சூர்மா ஹாக்கி கிளப் ஆகிய நான்கு அணிகள் பங்குபெறும். 250-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹரியானாவைச் சேர்ந்த 30 வயதான ராணி ரம்பால் சூர்மா, ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக வழிகாட்டவுள்ளார். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு மகளிர் ஹாக்கி அணி தகுதி பெறாத நிலையில், ஹாக்கி இந்தியா லீக் சரியான நேரத்தில் வந்திருப்பதாகவும் இது திருப்புமுனையை ஏற்படுத்தும் என உணர்வதாகவும் ராம்பால் தெரிவித்திருக்கிறார்.

"இம்முறை லீக்-ல் நான்கு அணிகள் மட்டும் இருக்கின்றன. இந்த லீக் தொடங்குவது தாமதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொடக்கத்துக்காக ஹாக்கி இந்தியா லீக்-ஐ பாராட்ட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாக்கி இந்தியா லீக் போட்ட அடித்தளத்தால்தான், ஆண்கள் ஹாக்கி அணி டோக்கியோ மற்றும் பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களை வென்றன. பெண்களுக்கான லீக் அறிமுகத்திற்கு நன்றி. இதனால், 2032 மற்றும் 2036 ஒலிம்பிக்கில் ஹாக்கியில் திறமையான பல இளம் பெண்களை நாம் நிச்சயமாக காண்போம். ஒருகாலத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதல்லவா?  பெண்கள் ஐபிஎல் அணியை போல பெண்கள் ஹாக்கி அணியைப்பற்றியும் எல்லோரும் பேசுவார்கள். அந்தக்காலம் வெகுதூரத்தில் இல்லை" என பெண்கள் ஹாக்கி இந்தியா லீக்கின் தொடக்கம் குறித்து ரம்பால் நம்பிக்கையும் நெகிழ்ச்சியுமாக கூறியுள்ளார்.

Indian women hockey

தவிர, இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கோல் கீப்பர் பி. ஆர். ஸ்ரீஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்த ராணி ராம்பால், "ஸ்ரீஜேஷின் 20 ஆண்டுகால சர்வதேச அனுபவம் ஜூனியர் அணிக்கு மிகுந்த பயனளிக்கும்'' என்று நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

திருவாரூர்: "நேஷனல் டீம்ல விளையாடணும்" - தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகமது இருஃபான். கடந்த டிசம்பர் 28 முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வலைப்பந்து (Netball) சங்கம் சார்பில் ... மேலும் பார்க்க

IPL 2025 : ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ! - காரணம் என்ன?

18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.BCCIமார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தத... மேலும் பார்க்க

Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' - அறிவிக்கப்பட்ட இந்திய அணி!

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் ஆடவிருக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப... மேலும் பார்க்க

Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ - டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை

Ajith Kumar Racingதுபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்... மேலும் பார்க்க

Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் பேச்சு

சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கல்லூரி மாணவர்களிடையே பேசுகையில், 'இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்!' எனப் பேசியிருக்கிறார்.Ashwi... மேலும் பார்க்க

''கிரிக்கெட் போட்டியை புறக்கணியுங்கள்; எங்களுடன் நில்லுங்கள்'' - வேண்டுகோள் வைத்த பெண் ஒலிம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை புறக்கணிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஆப்கானிஸ்தான் பெண் ஒலிம்பியன் ஃப்ரிபா ரெசாயி. யார் இந்த ஃப்ரிபா ரெசாயி? இவர் ஏன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர... மேலும் பார்க்க