2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள்...
மத கஜ ராஜா முதல்நாள் வசூல்!
மத கஜ ராஜா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர். தற்போது, இப்படம் பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து நேற்று (ஜன.12) வெளியானது.
இதையும் படிக்க: வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
மேலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்தாண்டின் முதல் வணிக வெற்றிப்படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், மத கஜ ராஜா தமிழகத்தில் மட்டும் முதல்நாள் வசூலாக ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.