Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
அடுத்ததாக, தனுஷை இயக்க ஆனந்த் எல். ராய், அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: நடிகர் அஜித் குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
இந்த நிலையில், விடுதலை - 2 திரைப்படம் திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததையடுத்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், “விடுதலை - 2 படத்தைத் தொடர்ந்து எங்கள் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் 7-வது படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்” எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், நடிகர் சூரியின் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதை, செல்ஃபி படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.
வாடிவாசல் படத்திற்குப் பின் தனுஷின் படத்தை வெற்றி மாறன் இயக்குவார் எனத் தெரிகிறது.