435 ரன்கள் குவித்த இந்திய மகளிரணி! வாணவேடிக்கை காட்டிய ஸ்மிருதி, பிரதிகா!
காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு: ராகுல், சோனியா பங்கேற்பு!
காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முதல் பிரிவினை 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து, அக்கட்சி தலைமை அலுவலகம் குறித்த பிரச்னை தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில், தில்லியில் தீன் தயாள் உபாத்யா சாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா காந்தி பவன் புதன்கிழமை காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தி, சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.