தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகர் விக்ரம் பிரபு! புதிய போஸ்டர் வெளியீடு!
வளர்ப்பு நாய்க்கு ரூ.5 லட்சம் செல்வில் பிறந்தநாள் விழா! விடியோ வைரல்!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்சத்பூரில் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயின் பிறந்தநாளை ரூ.5 லட்சம் செலவில் பிரம்மாண்டமாகக் கொண்டாடியுள்ளார்.
ஜம்சத்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சப்னா சோனா என்ற பெண் தனது வளர்ப்பு நாயின் மீதான பாசத்தை வெளிக்காட்டுவதற்காக அந்த நாயின் 4வது பிறந்தநாளை சுமார் ரூ.5 லட்சம் செலவில், 300 விருந்தினர்கள் முன்னிலையில் கொண்டாடியுள்ளார். மேலும், அவரது வளர்ப்பு பிராணிக்காக பிரத்யேகமாக ரூ.40,000 செலவில் பிறந்தநாள் கேக் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு வெட்டப்பட்டது.
முன்னதாக, பல்வேறு வகையான இசைவாத்தியங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுக்கப்பட்டு அந்த வளர்ப்பு பிராணியின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:புது தில்லியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கேஜரிவால்!
இந்த கொண்டாட்டம் தெடர்பான விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த விடியோவில் பிரம்மாண்ட அலங்காரங்களுடன் அவரது வளர்ப்பு நாயின் பிறந்தநாள் கொண்டாடப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்த விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் அனைவரும் அந்த பெண்ணின் வளர்ப்பு நாய்க்காக பல்வேறு விதமான பரிசுகளையும் அளித்துள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட விடியோக்களை இணையத்தில் பகிர்ந்து இணையவாசிகள் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.