செய்திகள் :

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங். நிர்வாகி சுட்டுக்கொலை!

post image

மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் இன்று (ஜன.14) காலை அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகிகளான ஹசன் ஷேக், பக்குல் ஷேக் மற்றும் அவரது உதவியாளரான எசாருதீன் ஷேக் ஆகிய மூன்று பேரும் நயாபஸ்தி பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்கள் மூவரின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில், ஹசன் ஷேகின் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் மற்ற இருவரும் காயமடைந்த நிலையில் மூவரும் மீட்கப்பட்டு மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஹசன் சேக் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

இதையும் படிக்க: மோசமான வானிலை: ராஞ்சியில் ஏராளமான விமானங்கள் தாமதம்!

இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் அப்பகுதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த போலீஸார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜன.2 அன்று இதே மால்டா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான துலால் சர்க்கார், அவரது சொந்த கட்சிக்காரர்களினாலே சுட்டுக்கொல்லப்பட்டதில் மால்டா நகர திரிணாமுல் காங். தலைவர் நரேந்திர நாத் கைது செய்யப்பட்டார்.

இதேப்போல், தற்போது கொல்லப்பட்ட ஹசன் ஷேக்கும் உள்கட்சி பூசல்களினால் கொல்லப்பட்டாரா என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த கொலை குறித்து ஆளும் கட்சியோ மற்றும் எதிர் கட்சியான பாஜகவும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார்.பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்... மேலும் பார்க்க

ஒடிசா: யானை தாக்கியதில் தந்தை, மகள் படுகாயம்!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.கஞ்சம் மாவட்டத்தின் முஜகடா வனப்பகுதியில் இருந்து சரப்படா கிராமத்தினுள் இன்று (ஜன.14) அதிகாலை காட்டு யான... மேலும் பார்க்க

பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் தூதரகம் திறப்பு! - அமைச்சர் ஜெய்சங்கர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் நாட்டுத் தூதரகம் திறக்கப்படும் என ஸ்பெயின் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு ச... மேலும் பார்க்க

அவனியாபுரம்: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன் பலியானார்.விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் களமாடும்போது, காளை நெஞ்சில் முட்டியதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத... மேலும் பார்க்க

32 ஆண்டுகள் தீவில் தனியாக வாழ்ந்த நபர்! வெளியேறிய 3 ஆண்டுகளில் மரணம்!

இத்தாலி நாட்டின் தீவு ஒன்றில் 32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த நபர் அதைவிட்டு வெளியேற்றப்பட்ட 3 ஆண்டுகளில் மரணமடைந்துள்ளார்.அந்நாட்டின் மொடான எனும் ஊரைச் சேர்ந்த மௌரோ மொராண்டி (வயது 85) எனும் நபர் சார்டீனிய... மேலும் பார்க்க

சென்னை திரும்புவோருக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்!

தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக வரும் 19 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) தூத்துக்... மேலும் பார்க்க