Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்தப்படவுள்ளன. மற்ற அணிகளுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? ஹர்பஜன் சிங் பதில்!
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் இருவருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேத்யூ ஷார்ட் மற்றும் ஆரோன் ஹார்டி போன்ற ஆல்ரவுண்டர்களும் அணியில் உள்ளனர். பிரதான பந்துவீச்சாளராக ஆடம் ஸாம்பா மட்டுமே அணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு உறுதுணையாக கிளன் மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ ஷார்ட் பந்துவீச்சில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!
சாம்பியன் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா.