ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை!
ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை படைத்துள்ளார்.
19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த இரா ஜாதவ் 346* ரன்கள் விளாசி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, அஜித் அகர்கர் படித்த ஷாரதாஸ்ரமம் வித்யாமந்திர் பள்ளியில் மாணவி இரா ஜாதவ் படித்துவருகிறார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
மும்பை - மேகாலயா அணிகள் மோதிய போட்டி பெங்களூரில் உள்ள அளூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா அணி கேப்டன் பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்க, மும்பை அணி வீராங்கனைகள் சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்டு வாணவேடிக்கைக் காட்டியதுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 563 ரன்கள் குவித்தனர்.
அடுத்து ஆடிய மேகாலயா அணி வெறும் 19 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 6 பேட்டர்கள் ரன்கள் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினர்.
இதனால், மும்பை அணி 544 ரன்கள் வித்தியாத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியில் 14 வயதான இரா ஜாதவ் 157 பந்துகளில் 42 பவுண்டரிகள், 16 சிக்ஸர்களுடன் 346* ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!
இதன் மூலம் இந்திய வீராங்கனைகளில் முச்சதம் அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இரா ஜாதவ். இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் லிஸ்ஸில் லீ, 2010 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 427 ரன்கள் குவித்ததே, மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களாகும்.
முச்சதம் விளாசி சாதனை படைத்த இரா ஜாதவ், மகளிருக்கான டபிள்யூபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போனார். இருப்பினும், மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குள்பட்டோருக்கான டி20 அணியின் காத்திருப்புப் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.