செய்திகள் :

ஜீவசமாதி அடைந்தவரின் உடலை தோண்டியெடுக்கும் காவல் துறை!

post image

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69) என்பவர் கட்டியிருந்த கோயிலில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.10) அன்று ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும், அவரது மகன் ராஜநேசன் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்தப் பேட்டியில் கடந்த ஜன. 10 அன்று கோபன்சுவாமி அவராகவே அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தினுள் நடந்து சென்று அமர்ந்துக்கொண்டதாகவும்.

பின்னர், அங்கேயே கோபன் சுவாமி ஜீவ சமாதி அடைந்துவிட்டதாகவும், தனது உடலை பொதுமக்கள் யாரும் பார்க்காமல் அடக்கம் செய்யவேண்டும் என குடும்பத்தினரிடம் கோபன் சுவாமி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து

ஆனால், அவர்களது அக்கம்பக்கத்தினர் கோபன் சுவாமி பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்ததாகவும், இந்த மரணத்தில் அவரது குடும்பத்தினர் நடந்துக்கொண்டது மிகவும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், கோபன் சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி காவல் துறையினர் அவரை காணவில்லை என வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியின் வருவாய் கோட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் அவரது தலைமையில் காவல் துறையினர் கோபன் சுவாமியின் உடலை இன்று (ஜன.13) தோண்டி எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதற்கு பிறகு மருத்துவர்கள் அந்த உடலை உடற்கூராய்வு சோதனை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருத... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.அம்மாநிலத்தின் மாவோயிஸ்டு அமைப்பின் பிரிவுக் குழு உற... மேலும் பார்க்க

சூது கவ்வும் - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சூது கவ்வும் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அசோக் செ... மேலும் பார்க்க

குஜராத்: சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் கைது!

குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.அம்மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்து... மேலும் பார்க்க

பள்ளிக்கூடத்தில் கண்ணாடிப் பலகை உடைந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்!

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக்கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிப் பலகையை உடைந்து விழுந்ததில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.தெற்கு கொல்கத்தாவில் இயங்கிவரும் பள்ளிக்கூடத்திற்கு இன்று (ஜன.... மேலும் பார்க்க

லெபனான்: ஒப்பந்ததை மீறி தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல்! 3 பேர் பலி!

லெபனான் நாட்டின் தெற்கு மாகாணத்தில் மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். கடந்த ஜன.11 அன்று தெற்கு லெபனானின் ஷீபா நகரத்தின் பஸ்திரா பகுதியிலுள்ள ஒரு பண்ணையின... மேலும் பார்க்க