ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சரின் சொத்துகள் குறித்து விசாரணை: முகமது யூனுஸ...
நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரிப்பு!
புதுதில்லி: நடப்பு நிதியாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரித்து 1,82.02 கோடி டன்னாக உள்ளது.
பிசினஸ்-டு-பிசினஸ் இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் தொகுத்த தரவுகளின்படி, நாட்டின் நிலக்கரி இறக்குமதி முந்தைய ஆண்டில் 178.17 மில்லியன் டன்னாக இருந்தது.
இருப்பினும், நாட்டின் நிலக்கரி இறக்குமதி நவம்பர் மாதத்தில் 19.57 மில்லியன் டன்னாக குறைந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இது 22.30 மில்லியன் டன்னாக இருந்தது.
மேலும், மின் உற்பத்தி நிலையங்களில் கையிருப்பு நிலை போதுமானதாக இருந்ததால் இறக்குமதி தேவை குறைத்தது என்று எம்ஜங்க்ஷன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய வர்மா தெரிவித்தார். இந்த போக்கு வரும் மாதங்களிலும் தொடர வாய்ப்புள்ளது என்றார்.
இதையும் படிக்க:
2024 ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 117.73 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 118 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில் சற்றே குறைவு.
கோக்கிங் நிலக்கரி இறக்குமதி ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில் 36.93 மில்லியன் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 37.97 மில்லியன் டன்னாக இருந்தது.
தற்போதைய இறக்குமதிக் கொள்கையின்படி, நுகர்வோர்களே நிலக்கரியை அவர்களின் வணிக தேவையின் அடிப்படையில் தாராளமாக இறக்குமதி செய்யலாம். ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பிற எஃகு உற்பத்தி ஆலைகள் மூலம் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.