அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்...
கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், காலை வேளைகளில் அடா் மூடுபனி நிலவி வருகிறது.
இதனால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(ஜன.13) விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மகர சங்கராந்திக்காக ஜனவரி 14ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து
ராஜஸ்தானில் ஜனவரி 15-ஆம் தேதி மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகானேர், ஜெய்ப்பூர், அஜ்மீர், பரத்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மேக மூட்டம், மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 15 மாவட்டங்களுக்கு அடர் பனிமூட்டம் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. எனவே, கடும் குளிரால், ஒருசில மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓரிரு நாள்கள் முதல், நான்கு நாள்கள் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.