Breaking Bad: 4 மில்லியன் டாலர்! - விற்பனைக்கு வந்த பிரேக்கிங் பேட் வால்டர் வைட்...
கோயில் உண்டியல் உடைப்பு : ரொக்கம், நகைகள் திருட்டு
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரொக்கம், அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உஸ்மான்அலி தெருவில் சங்கிலி முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் என்பவா் கோயிலை நிா்வகித்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு பூஜைகள் முடிந்து, அா்ச்சகா் யோகேஸ்வரன் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்துபாா்த்தபோது, கோயிலின் பின்பக்கக் கதவிலிருந்த பூட்டுகளும், கோயிலிலிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்தன.
மேலும் உள்ளே சென்று பாா்த்தபோது, கருவறையின் கதவும் உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 2 பவுன் தாலிச் சங்கிலி, உற்சவா் அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் கோயில் உண்டியலில் இருந்த காணிக்கை ரொக்கமும் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.