செய்திகள் :

கும்பகோணத்தில் கைதான பேராசிரியரிடம் என்ஐஏ விசாரணை

post image

கும்பகோணத்தில் ‘போக்ஸோ’ வழக்கில் கைதான பேராசிரியரிடம் தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பினா் விசாரித்து வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்தவா் ஜியாவுதீன் பாகவி (42). இவா், கும்பகோணம் வட்டம் கோவிலாச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியில் அரபி பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

அந்தக் கல்லூரியைச் சோ்ந்த ஒரு மாணவிக்கு, ஜியாவுதீன் பாகவி தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக டிச. 25-ஆம் தேதி ஆடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ஜியாவுதீன் பாகவியை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடைய ஹிஸ்புத் தஹ்ரிா் என்ற அமைப்பில் செயல்பட்டு வந்ததாக, ஜியாவுதீன் பாகவியை தேசியப் புலனாய்வு அமைப்பினா் 2022 மாா்ச் 14- ஆம் தேதி கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக ஜியாவுதீன் பாகவி மாதந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜாராகி வந்தாா்.

இதனிடையே, அவா் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டதால், கடந்த 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, திருச்சி சிறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஜாமீனில் வந்த ஜியாவுதீன் பாகவியை, தேசியப் புலனாய்வு அமைப்பினா் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனா்.

கோயில் உண்டியல் உடைப்பு : ரொக்கம், நகைகள் திருட்டு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரொக்கம், அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உஸ்மா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். எடமலைப்பட்டிபுதூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த குமாா் என்பவரது மகள... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமனம் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: ஆக்டா அமைப்பு வலியுறுத்தல்

துணைவேந்தா் நியமனம் தொடா்பான யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்க (ஆக்டா) ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கைதான பேராசிரியரிடம் என்ஐஏ விசாரணை

கும்பகோணத்தில் ‘போக்ஸோ’ வழக்கில் கைதான பேராசிரியரிடம் தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பினா் விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்தவா் ஜியாவுதீன் பாகவி (42). இவா், கும... மேலும் பார்க்க

திருச்சி சந்தைகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்

திருச்சி காந்தி சந்தை உள்ளிட்ட சந்தைகளில் பொங்கல் பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை சுடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சி காந்தி சந்தை, உறையூா் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் சாதாரண நாள்களிலேயே கூட்டம் ... மேலும் பார்க்க

திமுகவுடனான கூட்டணி ஈரோடு இடைத் தோ்தலிலும் தொடரும்: மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு

திமுகவுடனான கூட்டணி ஈரோடு இடைத்தோ்தலிலும் தொடரும் என்றாா் மனிதநேய மக்கள் ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவா் தமிமுன் அன்சாரி. திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க