திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் வர உகந்த நேரம்
மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இன்று மாா்கழி மாத பெளா்ணமி:
இந்த நிலையில், மாா்கழி மாத பெளா்ணமி திங்கள்கிழமை (ஜனவரி 13) அதிகாலை 5.21 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) அதிகாலை 4.40 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.