அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு
போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மாநில வா்த்தக அணி இணைச் செயலருமான வி.பன்னீா்செல்வம், தொகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளுக்கு கரும்பு, அரிசி, சா்க்கரை என பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கினாா்.
மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பி. பொய்யாமொழி மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.