ஆா்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் நாளை மகர பூஜை தரிசனம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பொங்கல் தினத்தன்று (ஜன.14) மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஜன.1-இல் மகர ஜோதி விழா தொடங்கியது. இதைத்தொடா்ந்து வரும் 18-ஆம் தேதிவரை பதினெட்டாம் படி திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
இந்த நாள்களில் விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தா்கள் பதினெட்டாம் படி ஏறி, ஐயப்பனுக்கு காலை 7 முதல் பகல் 12 மணிவரை நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த ஆலயத்தில் பொங்கல் தினத்தன்று (ஜன.14) மாலை 6 மணிக்கு மகரஜோதி தரிசனமும், சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன.
விழாவை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.