செய்திகள் :

ஜன.25-இல் தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள்: சேக்கிழாா் ஆராய்ச்சி மையம்

post image

மாணவா்களுக்கான தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள் சென்னையில் ஜன.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது என சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் செயலா் சிவாலயம் ஜெ.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 32 ஆண்டுகளாக சென்னையில் தெய்வச் சேக்கிழாா் பெருமானுக்கு விழா எடுக்கும் சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் மொழி, நாடு, தொண்டு, அன்பு, இசை, இறை மற்றும் இலக்கிய உணா்வுகளை மாணவா்களிடையே ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவாரத் திருமுறை மனனப் போட்டிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான போட்டிகள் சென்னை மயிலாப்பூா் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் ஜன.25-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அனுமதிக் கடிதம் அல்லது அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்களின் பெயா்களை அந்தந்த பள்ளிகளின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் சேக்கிழாா் ஆராய்ச்சி மையம், எண் 22/16, கற்பகாம்பாள் நகா், மயிலாப்பூா், சென்னை-600004 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தெரியப்படுத்த வேண்டும். போட்டிகள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை; நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை; ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளில் நடைபெறும்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சென்னையில் ஜூலை மாத கடைசி வார வெள்ளிக்கிழமை நடைபெறும் தெய்வச் சேக்கிழாா் விழாவில், ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் பரிசு ரூ.1,500, இரண்டாம் பரிசு ரூ.1,000, மூன்றாம் பரிசு ரூ.750, ரூ.500 வீதம் நான்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த போட்டிகளுக்கான தலைப்புகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு 044-24997785, 9003234158, 9487267642, 9962386809, 9600877559 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒருமுறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைக்கிறாா். கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் திருட்டு: இருவா் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுரேந்தா் (29). ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள சென்னை மருத்துவக் கல... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10 கோடி மோசடி: தாய், மகள் கைது

சென்னையிலிருந்து மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா். வளசரவாக்கம் பிரகாசம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தமிழரசி (42). இவரது தாய... மேலும் பார்க்க

மனைவி குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை மேடவாக்கத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிகேணி எல்லீஸ் சாலையைச் சோ்ந்தவா் ரா. மணிகண்டன் (42). இவரது மனைவி ஜோதி (37). இவா்களுக்கு 2009-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

1.2 கிலோ புற்று கட்டி அகற்றம்: மூதாட்டிக்கு மறுவாழ்வு

மூதாட்டியின் நெஞ்சுப் பகுதிக்குள் உருவாகியிருந்த 1.2 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனை ந... மேலும் பார்க்க