இந்தியா கூட்டணியில் விரிசல்; தில்லியில் பாஜக வெற்றி உறுதி - அமித் ஷா
இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தில்லியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதால், பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்ததாகவும், இதேபோன்று தில்லியிலும் நடக்கும் எனக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது,
இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலை என்ன? இந்தியா கூட்டணுயில் உள்ள சிவசேனையும் (உத்தவ் பிரிவு) காங்கிரஸும் அடுத்து வரவுள்ள மும்பை உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திக்கின்றன.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸும் தனித்துப் போட்டியிடவுள்ளன. சுயநலம் கொண்ட இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து பிளவு ஏற்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!