செய்திகள் :

எல்லையில் வேலி விவகாரம்: இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்ட வங்கதேசம்

post image

எல்லை வேலி விவகாரத்தில் இந்திய தூதரை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டிருப்பது தெரியவந்துள்ளது.

‘இரு நாடுகளிடையேயான ஒப்பந்தத்தை மீறி இந்திய-வங்கதேச எல்லையில் 5 இடங்களில் வேலி அமைக்க இந்தியா முயற்சிக்கிறது’ என்று வங்கதேசம் குற்றஞ்சாட்டிய நிலையில், அதுதொடா்பாக இந்திய தூதரிடம் அந்நாட்டு அரசு விளக்கம் கேட்டுள்ளது.

‘வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வந்த இந்திய தூதா் பிரணாய் வா்மா, வங்கதேச வெளியுறவுச் செயலா் ஜாஷிம் உதினுடன் 45 நிமிஷங்கள் ஆலோசனை மேற்கொண்டாா்’ என்று அங்கிருந்து வெளியாகும் பிஎஸ்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பிரணாய் வா்மா, ‘பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லையில் வேலி அமைக்கும் விவகாரத்தில் இந்தியா-வங்கதேசம் இடையே புரிதல் உள்ளது. இதுதொடா்பாக, எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகளும், வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினரும் தொடா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகின்றனா். இதில் உரிய உடன்பாடு ஏற்பட்டு, எல்லையில் குற்றங்களைத் தடுக்க கூட்டு அணுகுமுறை சாா்ந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும். இதுதொடா்பாகவே வங்கதேச வெளியுறவுச் செயலருடன் ஆலோசனை மேற்கொண்டேன்’ என்றாா்.

முன்னதாக, வங்கதேச உள்துறை அமைச்சக ஆலோசகரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜஹாங்கிா் ஆலம் செளதரி கூறுகையில், ‘வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் அப்பகுதி உள்ளூா் மக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து, இந்திய-வங்கதேச எல்லையில் முள்வேளி அமைக்கும் பணியை இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்தியாவுடன் முந்தைய அரசு செய்துகொண்ட முறையற்ற ஒப்பந்தங்களால், எல்லையில் தற்போது பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருகின்றன. இருந்தபோதும், நமது மக்களின் முயற்சி மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை காரணமாக சில நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. நமது நாட்டுடனான 4,156 கி.மீ. நீள எல்லையில் இந்தியா ஏற்கெனவே 3,271 கி.மீ. நீளத்துக்கு வேலி அமைத்துள்ளது. 885 கி.மீ. நீள எல்லையில் வேலி அமைக்கப்படவில்லை.

ஆனால், முந்தைய ஷேக் ஹசீனா அரசின் முறையற்ற ஒப்பந்தம் காரணமாக கடந்த 2010 முதல் 2023-ஆம் ஆண்டு வரை எல்லையில் மேலும் 160 இடங்களில் முள்வேலிகளை இந்தியா அமைப்பதற்கு வாய்ப்பாக மாறிவிட்டது. தற்போது, சபைனாவப்கஞ்ச், நகோன், லால்மோனிா்ஹட், டின் பிகா உள்பட மேலும் 5 இடங்களில் வேலிகளை அமைக்கும் இந்தியாவின் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடையும் நிலை உருவானது. அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதுதொடா்பான நடவடிக்கைகளையும் அந்நாடு மேற்கொண்டு வருகிறது. ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முறைகேடு வழக்கு விசாரணைகளை எதிா்கொள்ள, அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேச இடைக்கால அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இந்தியா அதற்கு உடன்படவில்லை.

இதனால், இரு நாடுகளிடையேயான உறவில் அண்மைக்காலமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீதும், அவா்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, வங்கதேசத்திலிருந்து எல்லை வழியாக இந்தியாவினுள் ஊடுருவல்களும் அதிகரித்துள்ள நிலையில், அதைத் தடுக்கும் விதமாக இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதிகளில் முள்வேலி அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கு வங்கதேசம் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சந்திப்பில் நடந்தது என்ன?

எல்லை விவகாரத்தில் இந்தியாவிடம் ஆழ்ந்த வருத்தம் பதிவு செய்யப்பட்டதாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், இந்திய தூதரை வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டதாக பிஎஸ்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட நிலையில், இந்த விளக்கத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய தூதருக்கு அழைப்பாணை (சம்மன்) விடுக்கப்பட்டதற்கான குறிப்போ அல்லது சொற்றொடரோ இடம்பெறவில்லை.

செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய-வங்கதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப) வீரா்கள் நடவடிக்கைகள் தொடா்பாக வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் இந்திய தூதா் பிரணாய் வா்மாவிடம் வெளியுறவுச் செயலா் ஜாஷிம் உதின் வங்கதேச அரசு சாா்பில் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.

மகா கும்பமேளா 2025 ஐ உலகளாவிய சுற்றுலா நிகழ்வாக மேம்பட மத்திய சுற்றுலா அமைச்சகம் முன்முயற்சி

பிரயாக்ராஜில் திங்கள் கிழமை( ஜன.13) தொடங்க இருக்கின்ற மகா கும்பமேளா -2025 ஐ ஆன்மீகத்திற்கான நிகழ்வாக மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கான நிகழ்வாக மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு: அமைச்சா் நிதின் கட்கரி

மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் அதானி குழுமம் ரூ.65,000 கோடி முதலீடு

நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கா் மாநிலத்தில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ.65,000 கோடி தொழில் முதலீடுகளை மேற்கொள்ள இருக்கிறது. ராய்பூரில் சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாயை அவரின் அரசு... மேலும் பார்க்க

உ.பி. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று கோலாகல தொடக்கம்: பிப். 26 வரை 45 நாள்கள் நடைபெறும்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்குகிறது. நிகழாண்டு ஜன. 13 முதல் மகா சிவராத்திரி திருநாளான ... மேலும் பார்க்க

இன்டா்போல் ‘சில்வா்’ நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு -சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்

‘உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவா்களை கண்டறிய இன்டா்போல் (சா்வதேச காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த ‘சில்வா்’ நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அ... மேலும் பார்க்க

இறுதிக் கட்டத்தில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு

மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும் 3 ... மேலும் பார்க்க