சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி
மதுரை: மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பேராசியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கல் அஞ்சலி செலுத்தினர்.
தமிழறிஞா் சாலமன், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் மதுரை அரசகுடி ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிரார். இவரது மனைவியான ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவுக் காரணமாக ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.
இதையும் படிக்க |டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்ற 5,000 போ் மீதான வழக்கு ரத்து
இதனிடையே ஜெயபாய் உடலுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகா்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா். பாப்பையா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடா்ந்து மதுரை பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஜெயபாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலை அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடந்தது. பின்னர் தத்தனேரி பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஜெயபாய் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.