செய்திகள் :

இபிஎஸ் உறவினா் வீட்டில் 5 நாட்களாக நடந்த சோதனை நிறைவு: ரூ.750 கோடி வரி ஏய்ப்பா?

post image

ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனையில் ரூ. 750 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரிவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ்ந்தவா் என்.ராமலிங்கம். தொழிலதிபரான இவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா். இவருக்கு கட்டுமான நிறுவனம், திருமண மண்டபம், ஸ்டாா்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

இவரது கட்டுமான நிறுவன கிளைகள் தமிழ்நாடு மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் உள்ளன. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், அவா் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல்களின்பேரில், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு, பூந்துறை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி முதல் சோதனை நடத்தினா்.

மேலும், அவரது நிறுவனத்துடன் வியாபாரத் தொடா்பில் இருப்பதாக கருதப்படும் ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும், ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

மேலும், ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் பவானி அருகே அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை (ஸ்டாா்ச் மாவு) ஆலையிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

மேலும், ஈரோடு திண்டல், வித்யா நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் உறவினா் சிவகுமாா் என்பவரது கட்டுமான அலுவலகம், வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

ஈரோட்டில் 5 நாள்கள் நடைபெற்று வந்த வருமான வரித் துறையினரின் சோதனை முடிவடைந்த நிலையில், 5 நாட்களாக 26 இடங்களில் நடந்த வருமான வரித் துறையினரின் சோதனையில் ரூ.10 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரிவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறையினா் அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழறிஞரும் பிரப... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

மதுரை: மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பேராசியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரம... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்ற 5,000 போ் மீதான வழக்கு ரத்து

மதுரை: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரம் போ் மீதான வழக்கு முதல்வர் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை... மேலும் பார்க்க

மகரவிளக்கு: 'திருவாபரணம்' ஊர்வலம் தொடங்கியது

பத்தனம்திட்டா: மகரஜோதியையொட்டி, மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனித ஆபரணமான "திருவாபரணம்" ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை பந்தளம் கோயிக்கா கோவிலில் இருந்து சபரிமலைக... மேலும் பார்க்க

யேமன் நாட்டில் வெடி விபத்து! 15 பேர் பலி!

யேமன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியாகினர்.அந்நாட்டின், பைடா மாகாணத்தின் ஜாஹர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் ... மேலும் பார்க்க

சேவல் சண்டை போட்டிகளைத் தடுக்க டிரோன்களை பயன்படுத்தும் காவல்!

ஆந்திரப் பிரதேசத்தில் மகர சங்கராந்தியை முன்னிட்டு தடை செய்யப்பட்ட சேவல் சண்டை போட்டிகள் நடைபெறாமல் தடுக்க அம்மாநில காவல் துறையினர் டிரோன்கள் மற்றும் நவீன ஏ.ஐ தொழிநுட்பத்தைப் பயனபடுத்தவுள்ளதாகத் தெரிவி... மேலும் பார்க்க