BB Tamil 8: 'ஏன் மத்தவங்க ஆட்டத்தை திசை திருப்புறீங்க?' - ரவீந்தரைச் சாடிய விஜய்...
MadhaGajaRaja: 'ஒரு நடிகனா ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சண்டக்கோழிக்கு அப்புறம்..'- விஷால் ஓப்பன் டாக்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனிடையே இன்று (ஜனவரி 12) காலை ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தைப் பார்த்த விஷால் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு 'மதகஜராஜா' படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது திரையரங்கிற்கு வந்தால் ஒரு 10, 15 நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிடுவேன்.
ஆனால் 'மதகஜராஜா' படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து முழுமையாகப் பார்த்தேன். அவர்களின் கைத்தட்டல், விசில், சிரிப்பு எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நடிகனாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கும் சுந்தர் சாருக்கும் இது ஒரு ஸ்பெஷல் ஆன படம். 'சண்டக்கோழி'க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது.
உழைப்பு என்பது எல்லா படத்திற்கும் கொடுப்போம். ஆனால் இந்தப் படைத்தைப் பொறுத்தவரை படத்திற்கு உழைத்ததை விட ரிலீஸ்க்கு உழைத்ததுதான் அதிகம். கடைசியில் இந்தப் படம் வெளியாகி விட்டது. ஏன் இந்தப் படம் இவ்வளவு நாளாக வெளியாகவில்லை என்று நாங்கள் ஆதங்கப்பட்டிருக்கிறோம்.
கடவுள்தான் இந்த தேதியில் படத்தை வெளியாக வைத்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்தை எல்லோரும் பாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.