நாசரேத் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா
நாசரேத் தோ்வுநிலைப் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் அருண் சாமுவேல், செயல் அலுவலா் திருமலைக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொங்கலிடப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா், பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், கவுன்சிலா்கள், அலுவலக ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.