தனம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!
நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் ‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே, சத்யா ‘தனம்’ என்ற புதிய தொடரில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீகுமார் நடிக்கிறார்.
நடிகர் ஸ்ரீகுமார் அகல்யா, மலர்கள், மேகலா, வானத்தைப்போல, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தொடர்களில் நாயகனாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்.
இதையும் படிக்க: கூலி படப்பிடிப்பு அப்டேட்!
இதுவரை 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும்கூட.
தனம் தொடரில், ஸ்ரீகுமார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார், அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.
இந்த நிலையில், ‘தனம்’ தொடர் விஜய் தொலைக்காட்சியில் வரும் பிப். 17 ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.