செய்திகள் :

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர்,

மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!

6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்!

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!" என்று பதிவிட்டுள்ளார்.

வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை (பிப்.10) தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

இன்று லேசான பனிமூட்டம் நிலவும்

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க