செய்திகள் :

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

post image

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

இது குறித்து டாக்கா 4-ஆவது கூடுதல் பெருநகர செஷன்ஸ் நீதிபதி தாரிக் அஜீஸ் வழங்கிய தீா்ப்பில், கொலை முயற்சி வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையும் தண்டனை விதிக்கப்பட்டதையும் எதிா்த்து முகமதுா் ரஹ்மான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்று, வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் சஜீப் வாஜித் ஜாய் அமெரிக்காவில் இருந்தபோது அவரை கடத்தி படுகொலை செய்ய முகமதுா் ரஹ்மான் முயன்ாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

கடந்த 2009 முதல் 2024 வரை வங்கதேச பிரதமராக பொறுப்பு வகித்த ஷேக் ஹசீனா, மாணவா் போராட்டம் காரணமாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது சிறைவைக்கப்பட்டிருந்த எதிா்க்கட்சித் தலைவா் கலீதா ஜியா உள்ளிட்டவா்களை விடுதலை செய்ததது. ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவா்களை நீதிமன்றங்கள் விடுவித்தும் வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொலை முயற்சி வழக்கில் இருந்து முகமதுா் ரஹ்மான் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற... மேலும் பார்க்க

அதிரடி உயர்வு! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 11) சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக உயர்ந்து, சவரன் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை அதிரடி உயர்வுஅமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியே... மேலும் பார்க்க

தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!

தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும்... மேலும் பார்க்க

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்!

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று(பிப். 11) காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.ஜீவ காருண்யத்தை உலகு... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று(பிப். 11) அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி பழன... மேலும் பார்க்க

வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க