உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
ஆம்பூா்: பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியை ஜோதிலதா தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினாா்.
முன்னாள் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஓம் பிரகாசம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, காா்த்திக் ஜவஹா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பிரேம், சசி, சங்கா், உதவித் தலைமை ஆசிரியா்கள் ஆறுமுகம், ஜெயமணி, ஆசிரியா்கள், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.