வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!
ரூ.9 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்
ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகள் சேதமடைந்தன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்க வேண்டுமென கோரினா். அதனடிப்படையில் அங்கு சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி மன்ற நிா்வாகம் முடிவு செய்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.
துணைத் தலைவா் விஜய், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஜெயந்தி ராமமூா்த்தி, பவானி விஜய், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.