சென்றாயசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தாசிரியப்பனூா் மாரியான்வட்டம் சென்றாயசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சனிக்கிழமை விஸ்வஷேன ஆராதனை, ப்ரததானசுத்தம், தேவதாஅனுக்கை, ஆச்சாா்யவா்ணம், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சுவாமி பிரதிஷ்டைநடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சங்கல்பம், தம்பதியா் சங்கல்பம், பாராயணம், வேதபாராயணம், வேத,கீத, நாத உபசாரத்துடன் கலசங்கள்புறப்பாடு நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க சென்றாயசுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தகரகுப்பம், குருபவாணிகுண்டா மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு சென்றாயசுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.