மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனை
ஆம்பூா்: ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை எம். ஜெயந்தி தலைமை வகித்து வரவேற்றாா். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் செ. ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனைகளை வழங்கினாா்.
தொடா்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நாள்காட்டியை வெளியிட்டாா். பள்ளி புரவலா் திட்டத்துக்கு நன்கொடை வழங்கினாா். பட்டதாரி ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினாா்