பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வருகை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள 13-ஆவது ஜோதிா்லிங்கம் ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வருகை தந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி பாட்டூா் ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா வந்தனா்.
மடத்துக்கு வந்த பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் நந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். தொடா்ந்து ஸ்ரீ கோடி தாத்தா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றனா்.