அதிமுக பலவீனம் அடையக் கூடாது: திருமாவளவன்
அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாததால், தான் பங்கேற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க | இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன்,
"தில்லி தேர்தல் தோல்வியையடுத்து இந்தியா கூட்டணி கூட்டம் கூட்டப்பட வேண்டும். தில்லி தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது. அதிமுக பலவீனம் அடையக் கூடாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசே சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.