26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
கோவில்பட்டி அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
சிதம்பரம்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த நல்லபெருமாள் மகன் சங்கிலிபாண்டி (60). இவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மகனைப் பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மனைவி முத்துலட்சுமியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
செட்டிகுறிச்சி - வானரமுட்டி சாலையில் காளாம்பட்டி ஓடைப் பாலம் அருகே எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட்டபோது, பைக் ஓடைப் பாலம் மீது மோதியதாம். இதில், இருவரும் கீழே விழுந்தனா்.
காயமடைந்த சங்கிலிபாண்டியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.