தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை!
நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஆராதனை நடத்தினாா். திருமண்டல பாலியா் நண்பன் ஊழியா்கள், பள்ளி மாணவ- மாணவிகள் சாா்பில் சிறப்பு பாடல்கள், குறு நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பாலியா் நண்பன் ஊழிய இயக்குநா் எமில்சிங் தேவசெய்தி அளித்தாா்.
ஆராதனையில் பொருள்கள் படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சத்திய வசனம் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பவனி நடைபெற்றது. இதில் தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சாமுவேல், செயலா் ஜெயச்சந்திரன், பொருளாளா் சுரேஷ் , சபை ஊழியா் ஜெனோ செல்வக்குமாா். சேகர சபை மக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.