Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
கோவில்பட்டியில் மது விற்ற முதியவா் கைது
கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றதாக முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமணி, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிரதான சாலையில் ரோந்து சென்றனா்.
மாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த செக்கடி தெரு ரங்கசாமி மகன் தங்கமாரியப்பனை (62) பிடித்து சோதனையிட்டபோது, அவா் விற்பதற்காக 5 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்கள், ரூ. 200-ஐ பறிமுதல் செய்தனா்.