26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
தூத்துக்குடியில் பூக்கள் விலை கடும் உயா்வு! மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரம்!
தூத்துக்குடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது. கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனையானது.
திங்கள்கிழமை தை மாதக் கடைசி சுபமுகூா்த்தம், செவ்வாய்க்கிழமை தைப்பூசம் என அடுத்தடுத்து வருவதால், தூத்துக்குடி மலா்ச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
இங்கு வழக்கமாக 250 கிலோ முதல் 300 கிலோ வரை பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்துக் குறைந்து, சுமாா் 100 கிலோ பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால், விலை அதிகரித்துக் காணப்பட்டது.
மல்லிகைப்பூ கிலோ ரூ. 4 ஆயிரம், பிச்சிப்பூ, கனகாம்பரம் தலா ரூ. 3 ஆயிரம், ரோஜா ரூ. 300 என விற்பனையாகின. திருமண விழாக்களுக்கான ரோஜா இதழ் மாலை, சம்பங்கி இதழ் மாலை ஆகியவை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரம்வரை விற்பனையாகின. பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டாலும், பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.