பெங்களூரு விமான கண்காட்சி: வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய இந்திய விமானப்படை - Photo...
26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
புதுதில்லி: ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமாக, அதாவது டிசம்பர் காலாண்டு 26 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.111.68 கோடியாக உள்ளது.
இது முந்தைய 2023-24 ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.88.24 கோடியாக இருந்தது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வருவாய் ரூ.776.08 கோடியிலிருந்து 16.65 சதவிகிதம் அதிகரித்து ரூ.905.28 கோடியானது. அதே வேளையில் நிறுவனத்தின் செலவினம் ரூ.755.79 கோடியாக இருந்தது. இது கடந்த வருடம் ரூ.661.78 கோடியாக இருந்தது.
இதையும் படிக்க: ஐசிஆர்ஏ நிகர லாபம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!