Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை
கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்களுடன் மோடி கலந்துரையாடி இருக்கிறார். மாணவர்களுடன் பேசிய மோடி "தேர்வுகள் மட்டுமே எல்லாம் கிடையாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/dqfcvvaq/PPC2025ModiGurukul17391767829521739176801885.jpg)
மாணவர்கள் தங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்தி, கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். தங்களின் எல்லைகளை விரிவாக்கி, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மனதைத் தயார் செய்ய வேண்டும். நமது சமூகத்தில், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், வீட்டில் பதற்றமடையும் சூழல் உள்ளது.
உங்களுக்கு அழுத்தம் இருக்கலாம். ஆனால், நீங்கள் அதற்கு ஆளாகாமல், அதனைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்கள் ரோபோக்கள் அல்ல. நாம் முழுமையான வளர்ச்சிக்காகப் படிக்கிறோம். புத்தகங்களில் சிக்கிக் கொண்டால் மாணவர்கள் வளர முடியாது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ukvyjpw2/1739167852-7616.jpg)
மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான செயலைச் செய்யும்போதுதான் அவர்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும். தேர்வுதான் அனைத்தும் என்ற மனநிலையுடன் வாழக்கூடாது. முடிந்தவரை அறிவைப் பெற வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs