நள்ளிரவில் லன்ச்; காலையில் டின்னர்... நைட் ஷிஃப்ட் மக்களுக்கு குட்நைட் டிப்ஸ்!
Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்
டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாகியிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் எந்த மாற்றமும் இன்றி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.
#DelhiElectionResults
— Post-Truth (@PostTruthIndia) February 8, 2025
Tough fight between AAP and BJP
Meanwhile, Rahul Gandhi for the 3rd time: pic.twitter.com/nChQgVvnHc
டெல்லியில் 2014 முதல் தலா மூன்று மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக 6 தேர்தல்களில் ஒரு தொகுதியைக் கூட காங்கிரஸ் வெல்லவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. குறிப்பாக, ராகுல் காந்தி பெட்ரோல் நிலையத்தில் வேலைபார்ப்பவர் போன்றும், ஜீரோ பாருங்கள் என்று அவர் கூறுவது போன்றும் மீம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் இன்று ஜீரோவைக் காண்பித்து ராகுல் காந்தியைக் கேலி செய்திருக்கிறார். தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு, `12,00,000 லட்சத்துக்கு 0 வருமான வரி' என்று குறிப்பிட்டிருந்த சிறிய பதாகையைக் காண்பித்து, ``ராகுல் ஜி ஜீரோ பாருங்கள்." என்று கிண்டல் செய்தார்.
राहुल जी, ज़ीरो चेक कर लीजिए 0️⃣ pic.twitter.com/0Sg9IEy09I
— Anurag Thakur (@ianuragthakur) February 10, 2025
மேலும், தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்த அனுராக் தாகூர், ``பூஜ்ஜியங்களில் யாராவது சாதனை செய்திருந்தால், அது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிதான். டெல்லி மக்கள் 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் கொடுத்தார்கள்... 2015 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்... 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்... 2020 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்... 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்... இப்போது, 2025 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்..." என்று கேட்க, பா.ஜ.க எம்.பி-க்கள் ஜீரோ, ஜீரோ என ஒரேநேரத்தில் சத்தமாகக் கூறினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க-வினரால் பரப்பப்பட்டும் வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs