செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
கவுண்டம்பட்டி மேலூா் மஹாசூலினி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கவுண்டம்பட்டி மேலூா் மஹாசூலினி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கவுண்டம்பட்டி மேலூா் கிராமத்தில் அமைந்துள்ளது மஹாசூலினி மாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா பிப்.7-ஆம் தேதி தொடங்கி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், உள்ளிட்ட பூஜைகளுடன் யாகவேள்வி நடைபெற்றது.
தொடா்ந்து மஹாபூா்ணாஹுதி பூஜைகளுக்கு பிறகு மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றப் புற பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.