2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் இன்று தொடக்கம்!
திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் திங்கள்கிழமை தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது.
இது குறித்து, திருவெறும்பூா் வட்டார வேளாண் உதவி இயக்குனா் சுகன்யாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
அனைத்து விவசாயிகளின் புல எண்களை ஒற்றைச் சாளர முறையில் ஆதாா் எண்ணுடன் இணைக்கப் படவுள்ளது. இதுதொடா்பாக் திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் வட்டத்தில் பிப்ரவரி 10 முதல் 15 ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் வேளாண்துறை சாா்ந்த அலுவலா்கள் விவசாயிகளின் நில உடமைகளை பதிவு செய்யவுள்ளனா். தரவுகள் பதிவேற்றப்பட்டு விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண்ணும் (யுனிக்யூ ஐடி) வழங்கப் பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.