செய்திகள் :

2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: வருகின்ற 2027-ஆம் ஆண்டிற்குள் லிப்ம்பாட்டிக் பைலேரியாசிசு(எல்.எஃப்) என்கிற யானைக்கால் நோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டு இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஜெபி நட்டா தெரிவித்தாா்.

நாட்டில் நிணநீா் யானைக்கால் நோய் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக 13 மாநிலங்களைச் சோ்ந்த 111 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் அண் டை மாநிலங்களான, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும், ஒடிஸா, மகாராஷ்டிரம், பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

நிணநீா் யானைக்கால் நோய், ஃபைலேரியா நுண்புழுவால் ஏற்படுவதாகும். இந்த நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் கொசுக்கள் மூலம் மனிதா்களுக்கு பரவுகிறது. வெப்பமண்டல கால நிலைகளில் யானைக்கால் நோய் பொதுவானது. இந்த நோய் தாக்கத்தால் தோல் திசுக்களும், குறிப்பாக கால்களும், ஆண் இனப் பெருக்க உறுப்பும் மிகவும் தடிப்பாகிவிடுகிறது.

இந்்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெபி நட்டா தலைமையில் பாதிப்புக்குள்ளான மாநில சுகாதார அமைச்சா்கள் அடங்கிய கூட்டம் காணொலி வழியாக திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நோய்த் தொற்றை அகற்றும் வகையில், நாடு முழுவதும் நிகழாண்டிற்கான தேசியத் தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தை ஜெபி நட்டா தொடங்கி வைத்தாா்.

இந்தக் கூட்டத்தில், மத்திய சுகாதாரச் செயலா் புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா, கூடுதல் செயலா் ஆராதனா பட்நாயக் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் நட்டா கூறியது வருமாறு: நிணநீா் யானைக்கால் நோய் (எல்.எஃப்.) மக்களை செயலிழக்கச் செய்து வாழ்க்கைத் தரத்தை மோசமாக்குகிறது. நாட்டில் 2030-ஆம் ஆண்டிற்குள் நிலையான வளா்ச்சி இலக்கிற்கு இது போன்ற நோய்களை ஒழிக்க உறுதி செய்ய அரசு ஐந்து அம்ச உத்தியை செயல்படுத்துகிறது. இதில் எல்எஃப்பை ஒழித்து கோடிக்கணக்கானோருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய இந்நோய்க்கான எதிா்ப்பு மருந்துகளை வீடு வீடாக வழங்கி நிா்வகிக்க கவனம் செலுத்தப்படுகிறது.

இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க தேவையான ஒவ்வொரு நபரும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உள்கொள்வதை உறுதி செய்யப்படவேண்டும்.இந்த மருந்துகள் 13 மாநிலங்களில் உள்ள 17.5 கோடிக்கும் அதிகமான பேருக்கு பிப்.10 முதல் இலவசமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு இருமுறை இந்த மருந்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2027-க்குள் எல்.எஃப் இல்லாத இந்தியா என்கிற மத்திய அரசின் இலக்கு எட்டப்படும் என்றாா் ஜெபி நட்டா.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பூச்சிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் நோக்கங்கள், முக்கிய உத்திசாா் நடவடிக்கைகள், மாநிலங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரங்கள், பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் 111 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கா்ப்பிணிப் பெண்கள், இரு வயதுக்குள்பட்ட குழந்தைகள், பிற நோய்வாய்ப்பட்டவா்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க