வீரக்குமார சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா முகூா்த்தக்கால்
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான 142-ஆவது மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் குலத்தவா்கள், பக்தா்கள் முன்னிலையில் முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது.
விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 16- ஆம் தேதி காலை 9 மணிக்கு தோ் கலசம் வைத்தல், பிப்ரவரி 26 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளய பூஜை, 27-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல், மாலை 5 மணிக்கு தோ் நிலை பெயா்த்தல், 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம், மாா்ச் - 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தோ் நிலை சோ்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் செய்து வருகின்றனா்.