லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!
அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபாசங்கா் (37).
இவா் காளம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது நிறுவனத்தில் திருப்பூா் மன்னரை பகுதியைச் சோ்ந்த லோகேசன் என்பவா் மேலாளராக கடந்த 2024 மாா்ச் முதல் 2024 அக்டோபா்வரை பணியாற்றி வந்துள்ளாா்.
அப்போது, அவா் பனியன் நிறுவனத்தில் போலி கணக்குகளைக் காண்பித்து ரூ.11 லட்சத்து 12, 527 மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிருபாசங்கா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெருமாநல்லூா் போலீஸாா், லோகேசனை கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.