செய்திகள் :

பள்ளி வளாகத்தில் சுருண்டு விழுந்த 7-ம் வகுப்பு மாணவி; உயிரிழப்புக்கு குடற்புழு மாத்திரை காரணமா?!

post image

பட்டுக்கோட்டை அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் – பரிமளா தம்பதி. இவர்களது மூன்றாவது மகள் கவிபாலா (12). இவர் பள்ளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குழுவினர் பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில், மாணவர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை கொடுத்து விழுங்க வைத்தனர். இந்த மாத்திரையை விழுங்கிய கவிபாலா பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

கிராமத்தினர் சாலை மரியல் போராட்டம்

அப்போது, கவிபாலா மயங்கி சுருண்டு தரையில் விழுந்திருக்கிறார். அவரது மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வந்துள்ளது. இதைப் பார்த்த சக மாணவிகள் அலறியடித்து ஓடி ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர். உடனடியாக ஆசிரியர் துரைசிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் கவிபாலாவை அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக காரில் தூக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கவிபாலா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இறந்த மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாத்திரை சாப்பிட்ட, புக்கரம்பையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தியா, ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சகாயமேரி இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ``எங்களோடு நன்றாக விளையாடியவள் இறந்து விட்டாள்" என, கவிபாலா தோழிகள் புலம்பி அழுதுள்ளனர்.

குடற்புழு மாத்திரை சாப்பிட்ட மாணவி இறந்ததும் போராட்டம் நடத்திய மக்கள்

இந்த நிலையில், கவிபாலா குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர், ``கவிபாலா விழுங்கியது காலாவதியான மாத்திரையாக இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்குள்ளது. அந்த மாத்திரை மாணவி உயிரை காவு வாங்கி விட்டது" என்று ஆத்திரத்தில் அழுது புலம்பினர். மாணவியின் இறப்புக்கு மாத்திரை காரணமில்லை, உடல்நலக் குறைபாடு தான் காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நரிக்குடி: சத்துணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி; வயிற்று வலி... சமையலர் பணியிடை நீக்கம்!

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், புல்வாய்க்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் சத்துணவு மையத்தி... மேலும் பார்க்க

திருக்குறள் மாணவர் மாநாடு: "மாணவர்கள் படைப்பாளிகளாக வரவேண்டும்; ஏனென்றால்.." - முத்துக்குமரன் பேச்சு

விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.‌மாநாடு நிகழ்ச்சியைத் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.... மேலும் பார்க்க

தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் தமிழக மாணவிகள் சாதனை; அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள 3 முதல் முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 'வீர கதா 4.0' என்ற திட்டத்தின் கீழ் கவிதை, கட்டுரை எழுதுதல்... மேலும் பார்க்க

``நாங்களும் விமானத்தில் பறக்க வேண்டும்'' -அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர்கள்..!

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் மைக்கேல் ராஜ். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமை ஆ... மேலும் பார்க்க