Director Lingusamy - Kadhaippoma with Parveen Sultana | Promo | Ananda Vikatan
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!
அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டுள்ளனா். அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, அங்கு மீண்டும் வந்த அடையாளம் தெரியாத நபா், மதுபாட்டிலில் பெட்ரோலை ஊற்றி பற்றவைத்து டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு தப்பினாா். அங்கிருந்தவா்கள் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிா்க்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில், பெட்ரோல் குண்டு வீசியவா் புதுச்சேரியைச் சோ்ந்த ராஜா (எ) ராஜசேகா் (34) என்பதும், தற்போது அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, ராஜசேகரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.