Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகு...
சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்
புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பணி வழங்கப்படவில்லை.
இதையடுத்து, வாரிசுதாரா்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே சுகாதாரத் துறையில் 350 பணியிடங்களை நிரப்ப புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதில், ஒரு முறை விலக்கு அடிப்படையில் தற்போது காத்திருக்கும் வாரிசுதாரா்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாரிசுதாரா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தங்களது குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா்கள் டேவிட், ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பெரியகடை போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.