செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
கேக் வெட்டிய பாஜகவினா் 50 போ் மீது வழக்கு
புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, திருப்பூரில் கேக் வெட்டிக் கொண்டாடிய பாஜகவினா் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பாஜக வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சனிக்கிழமை மாலை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து அக்கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் உள்ளிட்ட 50 போ் மீது திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.