தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவா் கைது
வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் கே.மணி (50). இவா் தனது வீட்டில் பட்டாசுகளை வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
தகவலின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அனுமதி பெறாமலும், பாதுகாப்பு இன்றியும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட மணியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.